WhatsApp இற்கு போட்டியாக வந்து விட்டது Google இன் Message App
கூகுள் நிறுவனமானது தனது புதிய Google Message App ஐ அறிமுகப்படுத்திய நிலையில் இனி WhatsApp, I Message பயன்பாடுகள் அனைத்தையும் விட்டிட்டு google message app ஐ பயன்படுத்த தொடங்கலாம் என இந்த நிறுவனம் செய்திகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பல புதிய முக்கியமான அம்சங்களை வழங்க உள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது இது whatsapp இற்கு பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கபடுகிற நிலையில் google நிறுவனமானது RCS(Rich Communication Services) இந்த செய்தியிடல் பயன்பாட்டை பயன்படுத்தியுள்ளது இதன் மூலம் உயர் தெரிவுதிறன்கொண்ட புகைப்படங்கள், விடியோக்கள், GIFகள் மற்றும் நீண்ட மெசேஜ்கள், கோப்புக்கள் போன்றவற்றை இதன் மூலம் நீங்கள் தாரளமாக அனுப்பமுடியும்.
RCS அம்சம் இப்போது குறிப்பிட்ட பயனாளர்களுக்கே வழங்க பட்ட நிலையில் விரைவில் படிப்படியாக இதனை அனைத்து பயனாளர்களுக்கும் வழங்க உள்ளது கூகுள் நிறுவனமானது.இந்த app ஐ பயன்படுத்துவதன் மூலம் நமது ப்ரிவசி மற்றவர்களால் திருடபட மாட்டாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது கூகுள் நிறுவனமானது
கருத்துகள் இல்லை