சுயாதீன ஊடகவியாளர் மீது பொலிஸ் முறைப்பாடு
கடந்த பத்து ஆண்டுகளாக சுயாதீன உடகவியளராக எந்தவித பக்க சார்புமற்று தனது ஊடக பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்ற எமது சுயாதீன ஊடகவியலார் மயூதரன் மீது பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்கள் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. பல இக்கடான சூழ்நிலையான காலங்களிலும் எந்த வித பக்கசார்புமற்ற ஒரு உடகவியலனாக தனது பணியை சிறப்பாக செய்து வந்துள்ளார்.
பொது வெளியில் முகநூலில் பவிட்ட செய்தி பதிவை(இந்த முகநூல் பதிவில் எந்த தனிநபரின் பெயரும் சுட்டிகட்டபடவில்லை) தனிபட்ட முறையில் எடுத்து சென்று இதனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள் என்பது ஓர் ஊடக அடக்குமுறையாகவே பார்க்க முடிகிறது.அத்துடன் இது சுதந்திர ஊடக செயற்பாட்டுக்கு தடையாகும்.இது ஓர் ஆரோக்கியமான செயல் அல்ல என்பதை பொலிஸ் முறைப்பாடு செய்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அத்துடன் இச் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.
மயூதரனின் ஊடக பணி தொடர எமது வாழ்த்துக்கள்...!! .
கருத்துகள் இல்லை