ஜார்ஜ் ப்ளாயிட் மரணம்: ஓயாத கறுப்பின வெறுப்பு
Gentle giant என அழைக்கப்பட்ட புட்பால் வீரர் ஜார்ஜ் ப்ளாயிட். கறுப்பினத்தை சேர்ந்த இவர், புட்பால் விளையாட்டை விட்டு விலகிய பின்பு பாரில் பவுன்சராக பணிபுரிந்து வந்தார்.லாக்டவுன் காரணமாக ஜார்ஜ் ப்ளாயிட் பணியை இழந்திருந்தார். மினியேபாலிஸ் பகுதியில் உள்ள கடையில் பொருட்களை வாங்கிவிட்டு 20 டாலர்கள் கள்ளநோட்டு கொடுத்ததாக அவர் மீது ஒரு கடை முதலாளி புகாரளிக்க, அங்கு வந்த காவலர்கள் அவர் கைக்கு விலங்கிட்டு மூர்க்கமாக நடந்துகொள்கின்றனர். அதில் ஒரு காவலர் அவர் கழுத்தை முனங்கால்களால் நசுக்க, ஜார்ஜ் ப்ளாயிட் மூச்சுத் திணறி உயிரை இழந்தார்.
இந்த சம்பவம் அங்கு பெரும் கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மினியேபாலிஸ் காவல்நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
ஆயுத வன்முறை கூடாதென சொல்லி வந்த ஜார்ஜ் ப்ளாயிட் புரட்சிக்கு வித்திட்டிருக்கிறார். அமெரிக்கர்களின் ஓயாத கறுப்பின வெறுப்பு வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
ஜேமி ஃபாக்ஸ், ஸ்னூப் டாக் போன்ற கறுப்பின பிரபலங்கள், அமெரிக்காவில் கொத்துக் கொத்தாக மக்களை கொல்லும் சைக்கோக்கள் கூட கறுப்பின மக்களை விட மரியாதையாக நடத்தப்படுகிறார்கள் என்கின்றனர்.
கருத்துகள் இல்லை